மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்பு


தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை ரத்நில்லகலே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: