தமிழர் மேம்பாட்டு பேரவையால் நூலகம் திறந்து வைப்பு

செல்வி


அம்பாறை மாவட்டத்தை தளமாகக்கொண்டு இயங்கும் சமூகநல அமைப்பான தமிழர் மேம்பாட்டு பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட  நிறைவை முன்னிட்டு நூலகம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட  அதிகஷ்ட பாடசாலையான மல்லிகைத்தீவு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் மேலதிக கல்வி கற்றல் செயற்பாடுகள் இன்மை பெரும் குறைபாடாக நிலவிவருகின்றது.

இதனால் இங்கு கற்கும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் நீண்ட தூரம் சென்றே மேலதிக கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவர்கள் எதிர் நோக்கும் சிரமத்தை தீர்க்கும் நோக்கிலும்  தமிழர் மேம்பாட்டு  பேரவையின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம்  நூலகம்  ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

50 வருட கால வரலாற்றினை கொண்ட மல்லிகைத்தீவு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையானது  பல்வேறுபட்ட குறைபாடுகளுடன் இன்றுவரை இயங்கி வந்தாலும் இவற்றுள்  மாணவர்களின் மேலதிக கற்றல் நடவடிக்கை பெரும்  குறைபாடாக  உள்ளது. 

மேலதிக கற்றலுக்கு  தடையாக உள்ள நூலக குறைபாட்டை  தீர்க்கும் நோக்கில் அம்மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்கு தேவையான நூலகம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவி தர்ஷன் ரேணுகா நூலகத்தை திறந்து வைத்ததுடன் இந்நூலகத்தை கையளிக்கும் நிகழ்வில் தமிழர் மேம்பாட்டு பேரவையின் தலைவியும் ஊடகவியலாளருமான செல்வி வினாயகமூர்த்தி, இப்பாடசாலை அதிபர் எஸ்.கனகம்மா,உட்பட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தமிழர் மேம்பாடுட்டு பேரவையின் 16வது சமூகநல  செயற்பாடாக இவ் நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் .


No comments: