நேற்றைய தினம் மூவர் உயிரிழப்பு - முழு விபரம்


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்றைய தினம்  பதிவாகியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு - 8 பகுதியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் வெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடுவெல பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் கடந்த 27ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா மற்றும் இருதயம் செயலிழந்தமை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அங்குருவாதொட பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடந்த 30ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: