நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 7 கொரோனா  மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கோதடுவ பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும், குருநாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த   65 வயதுடைய பெண் ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.

பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர்  தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 13ம் திகதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28 ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை ஊடாக கொரோனா தொற்றினால் குறித்த உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: