வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழப்பு


பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பதுளை அசேலபுர பகுதியைச சேர்ந்த சிறுவன் மீது கனரக வாகனமொன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாந்தரத்தில் உள்ளீரக்கப்படவிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments