பேரணிக்கு எதிராக அம்பாறையில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 32 பேருக்கு தடையுத்தரவு

சந்திரன் குமணன்


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு  நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து திருக்கோவில் பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம்,  திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் சிவில் அமைப்பினர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள்  உள்ளிட்ட  32 பேருக்கு தடையுத்தரவு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

No comments: