வத்தளையில் நாளை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்


வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளையின் ஹேகித்த, பள்ளியாவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறு  நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளில் நாளை இரவு 10 மணி முதல் நாளை மறு தினம் பிற்பகல் 4 மணி வரை இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்குமென  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: