தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிப்பு


தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பாக இன்று பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: