நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 468 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 451 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 16 பேரும், வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 45,242 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7,210 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

No comments: