நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நிர்க்கதியாகி இருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அத்துனை பேரும் கட்டுநாயக்க விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைய குறித்த அனைவரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலும், நாடுதிரும்பிய நபர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: