நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் மேலும் 892 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 582 பேர்  பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 40 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 61,586 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,தற்போது நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: