இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 183 இலங்கையர்கள் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, சவூரி அரேபியாவிலிருந்து 75 பேரும்,சிங்கப்பூரில் இருந்து 67 பேரும்,கட்டாரில் இருந்து 28 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்பிய அவர்கள் அனைவரிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: