நாவிதன்வெளியில் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கபன் சீலை போராட்டமும்
எம்.எம்.ஜபீர்
கோரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிற்குமாறு கோரி சவளக்கடை, மத்தியமுகாம் அல்-அமானா சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேசத்தில் சாளம்பைக்கேணி அமீர் அலி வீதி புதுப்பாலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும், கபன் சீலை போராட்டமும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கோரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் அடங்கிய சுலோங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி சுகாதார நடைமுறைக்கமைவாக சமூக இடைவெளி பேணப்பட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ.தஜாப்தீன், இளைஞர்கள், பிரதேச முக்கிஸ்தர்கள் என பலர் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments: