தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அறிவிப்பு
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அல்லது என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன்,இன்று முதல் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments: