சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,282 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை, புதிதாக 8 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்களில் 2 சிறை கைதிகள் மற்றும் 2 சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சிறைச்சாலை கொத்தணியில் குணமடைந்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 3,868 ஆக காணப்படுகின்றது.

No comments: