நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,419 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 660 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்த 9 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றில் இருந்து மேலும் 774 பேர் குணமடைந்து நேற்று வீடுதிரும்பியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46,594 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7,555 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: