தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

ரயில்வே திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தனியார் ரயில் சேவை தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீரமானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தங்களது பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடந்த தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்ததாக தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments