கல்முனை மாநகர சபையில் உறுப்பினர் ஒருவரை இடை நிறுத்துவதாக மாநகர முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து சபையில் அமளி துமளி சபை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ஏ.எல்.எம்.ஷினாஸ்,றாசிக் நபாயிஸ்      கல்முனை மாநகர சபையில் 34வது சபை அமர்வு மாநகர சபையின் முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று (27.01.2021) நடைபெற்றது.

இன்றைய சபை அமர்வின்போது மாநகரசபையில் நிதிக்குழு, பொது வசதிகள் குழு, சுகாதாரக்குழு, சமூக கல்வி கலை கலாசார  குழு என சபை உறுப்பினர்களை கொண்டு புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.

இதன் போது சில உறுப்பினர்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் உறுப்பினர் கௌரவ.கே.செல்வராசா கருத்துக்களை தெரிவித்த பொழுது சபையின் ஒழுக்கத்திற்கு முரணாக முதல்வரை நோக்கி கை விரலை நீட்டி சபையில் ஒழுக்கம் இல்லாமல் பேசினார் எனத் தெரிவித்து  உறுப்பினர் செல்வா என்பவரை இந்த சபை அமர்வில் இருந்து இடைநிறுத்துவதாகவும், எதிர்வரும் சபையில் அமருவதற்கும் தடை விதிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபையினுடைய அங்கீகாரத்தை பெறாமல் முதல்வர் உறுப்பினர் ஒருவரை வெளியேற்ற முடியாது. என சில உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனை அடுத்து சபை முதல்வர்  சபை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து முதல்வர் சபையை விட்டு வெளியேறி செல்லும்போது சபையின் உறுப்பினர்கள் சிலர் பலத்த குரலோடு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.  சபா மண்டபத்தை விட்டு வெளியில் வந்த உறுப்பினர்கள் சிலரும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தனர்.

இதனை அடுத்து சபை முதல்வர்  சபை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து முதல்வர் சபையை விட்டு வெளியேறி செல்லும்போது சபையின் உறுப்பினர்கள் சிலர் பலத்த குரலோடு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.  சபா மண்டபத்தை விட்டு வெளியில் வந்த உறுப்பினர்கள் சிலரும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தமது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தனர்.


கௌரவ உறுப்பினர் எஸ். ராஜன்

இங்கே மாநகர சபையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. மாநகரசபையின் உண்மையான ஊடகவியலாளர்கள் வருகின்ற போது அவர்களுக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த சபைக்கு வருகின்ற பொழுது அவர்கள்  வெளியேற்றப்படுகிறார்கள். இன்று இந்த சபையின் பல்வேறு குழுக்கள் தெரிவு செய்யப்பட்ட போது வெறும் கையை உயர்த்தி பேசினார், கை விரலை நீட்டினார் என்பதற்காக சக உறுப்பினர் ஒருவரை மாநகர முதல்வர் வெளியேற்றி இருப்பது கண்டிக்கத் தக்கதாகும் என்று தெரிவித்தார்.

கௌரவ உறுப்பினர் அப்துல் மனாப்

இந்த மாநகர சபையின் மேயர் அவர்கள் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டார். மக்களுடைய பிரச்சினைகளை சபையிலே பேசுவதற்கு எங்களுக்கு நேரம் தருகிறார் இல்லை. இந்த சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை நாங்கள் கேட்டால் எங்களை வெளியேற்றுகிறார். மாநகர சபை முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் உறுப்பினர்களாகிய எங்களுடைய குரல்களை ஒடுக்கும் இந்த செயற்பாட்டையே கௌரவ முதல்வர் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

கௌரவ உறுப்பினர் கே. செல்வராசா

மாநகர சபை உறுப்பினர் என்பவர்கள் பொது மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். மாநகர சபையில் முதல்வர் அவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி இந்தப்பக்கம் பல்பு கேட்டு வந்துவிடக்கூடாது என்று சட்டத்தை பிறப்பித்துள்ளார். சேவைகளை சரியாக செய்யுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டு நிற்கின்றோம். அவர்களுடைய வீட்டுச் சொத்திலிருந்து மக்களுக்கு உதவி தாருங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. மக்களுடைய வரிப் பணத்திலிருந்துதான் நாங்கள் கேட்கின்றோம். சபையில் குழுக்கள்  தெரிவு செய்தபோது என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன். அப்போது என்னை தூசன வார்த்தைகள் கொண்டு அமருமாறு பணித்தார். அதனை நான் எதிர்த்து கேட்டபோது என்னை இந்த சபையிலிருந்து வெளியேறிச் செல்லுமாறு உத்தரவிட்டார். என்னுடைய பதிவுகள் அத்தனையும் இன்றைய தினத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றைக் கேட்க வேண்டும். இவ்வாறு மாநகர சபை உறுப்பினர்களை அடக்கி ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்

கௌரவ உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீம்

இந்த மாநகர சபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானமும் நடைபெறுவதில்லை. மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றது. 34 மாதங்கள் சென்றிருக்கின்றது. இதுவரையில் சாய்ந்தமருதுக்கு ஒரு உறுப்பினருக்கு வெறும் 350 ரூபா பெறுமதியான 17 மின்குமிழ்கள் மாத்திரமே கிடைத்திருக்கிறன. அதற்கான பதிவுகள் இங்கே மாநகரசபையில் இருக்கின்றது. சாய்ந்தமருதில் எதுவுமே இந்த மாநகர சபையால் நடைபெறுவது கிடையாது. முதல்வர் அவர்கள் தான்தோன்றித்தனமாக சட்டம் சட்டம் சட்டம் என்று இங்கே ஒரு சட்ட சபையை உருவாக்க பார்க்கின்றார். 41 உறுப்பினர்கள் இந்த கௌரவமான சபையில் இருந்தும் பொதுமக்களுக்காக எதனையும் செய்ய முடியாமல் இருக்கிறது. எங்களுடைய வேதனைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றோம்.  பொதுமக்கள் ஒன்று திரண்டு வாருங்கள்  இந்த சபையை கலைத்து விடுங்கள் என்று தெரிவித்தார்.

No comments: