சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் சிறைச்சாலைகளில் இருந்து 19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4122 ஆக அதிகரித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் 867 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 839 பேரும், மஹர சிறைச்சாலையில் 798 பேரும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 417 பேரும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 334 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: