நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் மேலும் 887 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்ட 866 பேருக்கும்,சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேருக்கும்  நேற்றைய தினம் தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 56,076 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7,816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,984 ஆக அதிகரித்துள்ளது.

இதேளை,கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் இருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: