அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற அலுவலர் ஒருவர் மாயம்


நேற்றைய தினம்  கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. 

காணாமல் போயுள்ள குறித்த நபர் திருகோணமலை சேருவில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும்   பொதுச் சுகாதார வெளிக்கள அலுவலர் என்றும்.  3 வயது ஆண் பிள்ளையின் தந்தை 28 வயதுடைய  க்ஷிபான்  என.  திருகோணமலை பிராந்திய மலேரியா ஒழிப்பு இயக்க காரியாலயம் உறுதிப்படுத்தியது.

மட்டக்களப்பு    ஏறாவுர் பகுதியே சேர்ந்த நபர் தற்போது பொத்துவில் பிரதேசத்தில் வசித்து வருபவரெனவும் ,  விடுமுறையில் வீட்டிற்கு வந்த சமயம் குறித்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.  

குறித்த நபரின் சடலம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.  இது தொடர்பில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: