தனிமைப்படுத்தலுக்கு உட்படும் மற்றும் விடுவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பிலான அறிவிப்பு

இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், மொனராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: