நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக  கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நசீர் வத்தை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்ஒலுவ கிழக்கு மற்றும் கல்ஒலுவ மேற்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகரகொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்று மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

No comments: