மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ; மேலும் ஒருவருக்கு கொரோனா


மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்குப் பயணிக்கும் நபர்களுக்கு,  எழுமாறாக மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்  மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட   அன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: