கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்


இந்தியாவினால் வழங்கப்பட்ட AstraZeneca Covishield  கொரோனா தடுப்பூசி செலுதர்தும் நடவடிக்கை  இன்று  ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: