பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு


2020ம் ஆண்டில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலால் பாடசாலைகள் மூடப்பட்டமை, பல பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டமை போன்ற காரணங்களால் சில மாணவர்களுக்கு பொருத்தமான சீருடைத் துணிகளை பெற்றுக்கொள்ள முடியாது போனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

No comments: