நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் 3,520 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுள் 1,185 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 830 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: