நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

6 விமான சேவைகள் மூலம் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, டுபாயில் இருந்து 152 இலங்கையர்களும் மாலைதீவில் இருந்து 70 இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன், கற்றல் மற்றும் தொழில் நிமித்தம் 425 பேர் குறித்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: