தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை


தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதனடிப்படையில் 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் இருந்த வீடுகள், கைத்தொழில்துறையினர் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலமாக 6 மாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சுற்றுலாத்துறையினர் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்த யோசனைகளின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments: