நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல் சப்ரகமுவ   மாகாணங்கள் உட்பட  காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே  வடக்கு  வட மத்திய  கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும்  மாத்தளை மாவட்டத்திலும்  இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடியுன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்படுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: