டிரக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 9 மாத குழந்தை


மொரகொட, மஹதிவுல்வெவ பகுதியில் டிரக்டர் ஒன்றில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டிரக்டரின் பின்னால் தாயும் குறித்த குழந்தையும் அமர்ந்து சென்றுள்ளதுடன் திடீரென தாயின் கை தவறி குழந்த கீழே விழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது டிரக்டரில் சிக்கிய குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி யக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9 மாதம் வயதுடைய நாமல்புர பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் டிரக்டரின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: