கொட்டகலை பகுதியில் 90 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


கொட்டகலை   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட

பகுதிகளில் உள்ள 90 பேருக்கு கொட்டக்கலை பிரதேச சபை  வளாகத்தில் இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய அதிகாரி ஜே.கணேஷ் தெரிவித்தார்.

அந்தவகையில் கொட்டக்கலை  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கொட்டகலை, தலவாக்கலை, வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்த,கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தவர்களுக்கும், வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்குமே இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,இப்பகுதியில் இதுவரையில் 48 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.No comments: