கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர் இவ்வாறு தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  வைத்தியசாலையில் அலுவலக  பணியாளர்கள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் வைத்தியசாலையில் தொற்று நீக்கும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments: