முகக் கவசம் அணியாத மேலும் 523 பேர் கைது


முகக் கவசம் அணியாத மேலும் 523 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 523 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 252 பேருக்கு மேற்கொண்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் 02 பேர் கொரோனா தொற்றாளர் ளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 271 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெறவுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முகக் கவசம் அணியாத நிலையில், மேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் 16 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

No comments: