43 கிலோகிராம் மஞ்சளுடன் மூவர் கைது


இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 43 கிலோகிராம் மஞ்சளை வைத்திருந்த மூவர் நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட 37, 25 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

யாழ்ப்பாண நீதிமன்றில் நேற்று மூவரும் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: