நாட்டில் கொரோனா மரணங்கள் 278 ஆக அதிகரிப்பு - முழு விபரம்


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, காரணமாக 2021 ஜனவரி 22ம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானது மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமை காரணமாக 2021 ஜனவரி 22ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  மரணித்தவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

No comments: