கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் பலி


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமைடைந்திருப்பதாக 
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு காயமடைந்தவர்களுள் 6 பேர் சிகிச்சைகளுக்காக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: