நாட்டில்,நாளாந்தம் சுமார் 20,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


நாட்டில்,நாளாந்தம் சுமார் 20,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றில் 10,000 பி.சி.ஆர்  பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், 5 தனியார் வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கேகாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை கூடத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments: