119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலியான தகவல்களை வழங்கிய ஒருவர் கைது
119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலியான தகவல்களை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை -கல்தேரா வீதியைச் சேர்ந்த சுமார் 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சில காலம் வௌிநாட்டில் வசித்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: