அதிகரிக்கும் தொற்றாளர்கள் ; ஆலையடிவேம்பில் 05 தொற்றாளர்கள் அடையாளம்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனிமனைக்குட்பட்ட ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 05 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டர் குறித்த 05 நபர்களுடன் பிரதேசத்தில் 36 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 1 கொவிட 19 மரணம் பதிவாகியுள்ளது

மேலும் 

நேற்று மாத்திரம் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வலயத்தில் 21 புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று 3 ஆம் திகதி காலை 10 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட நாளாந்த கொவிட் 19 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் கல்முனை பிராந்தியத்தில் மொத்தமாக 830 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 583 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன் 247 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவருகின்றனர்

19,937 பீ.சீ.ஆர். , அன்ரிஜன் பரிசோதனைகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1571பேர் இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: