கொரோனா வைரஸ் தொற்று - நாட்டில் நேற்றைய தினம் 04 உயிரிழப்பு பதிவு
நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு – ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலையிலிருந்து, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார்.
தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறுதி விஷமானமை மற்றும் கொவிட் நியுமோனியோவே, அவரது மரணத்திற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, அஹலவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து, ஹோமாகமை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் செயலிழந்தமை மற்றும் கொவிட் நியுமானியாவே அவரது உயிரிழப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்தறை- தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரும் கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் இன்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுடன், குறுதி விஷமானமை மற்றும் இருதய நோய் என்பனவே அவரது உயிரிழப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,856 ஆக உயர்வடைந்துள்ளது.
No comments: