நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 03 பேர் உயிரிழப்பு
நாட்டின் பல்வேறு பாகங்களில் நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், முன்னதாக இடம்பெற்ற வாகன விபத்துகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, வாகன விபத்துக்களில் காரணமாக கடந்த கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வாகன விபத்துகள் இடம்பெறாத வகையில் சாரதிகள் மற்றும் பொது மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மதுபோதையில் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை நாளை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: