மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்


மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மனித உரிமை ஆணைக்குழுவின்  தலைவராக ஜகத் பாலசூரிய தெரிவு செய்யப்பட்டமைக்கு நாடாளுமன்ற பேரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிமல் கருணாசிறி, விஜித நாணயக்கார, அனுசுயா சண்முகநாதன் மற்றும் எச்.கே.நவரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: