அம்பாறை மத்திய முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
எஸ்.அஷ்ரப்கான்
நாவிதன்வெளி சுகதார வைத்திய அதிகாரி பிரிவு மத்திய முகாம்-03 கிராம சேவகர் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் (30) கொரோனா தொற்றாளர்களாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஒரு அறையில் ஆடைத்துணிகள் விற்பனை இடம்பெற்றுள்ளதால் அங்கு துணிகள் வாங்க வந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 25 நபர்களுக்கு PCR பரிசோதனை நேற்று (30.12.2020) மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: