கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாண்டிருப்பில் பொருள் கொள்வனவு

றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர் 


கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் கடந்த 28ம் திகதி கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் கல்முனை செய்லான் வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி (Rest house Road) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களும் மூடப்பட்டது.

அதே நேரம் மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இந்நிலையினை நீடிப்பதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கல்முனை சந்தையும் மூடப்பட்டுள்ளதால் பொது மக்கள் தங்களது பொருட் கொள்வனவுக்காக  பாண்டிருப்பு பிரதான வீதியில் பொருட் கொள்வனவு மற்றும் பொருட்களை விற்னை செய்வதில் ஈடுபடுவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

No comments: