வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டார்

சந்திரன் குமணன் அம்பாறை


அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  நேரில் சென்று பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்தின்  காரணமாக ஒரு மாத காலமாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும்  திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகள்  பூரணமாக முடக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக மக்கள் கூலி  தொழிலை மேற்கொள்ள முடியாது பல்வேறு அவஸ்தைகளை எதிர்கொண்ட நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது .

தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 

இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உணவை சமைத்து உண்ண முடியாத நிலையிலும் பலர் தத்தளித்து வருகின்றனர்.

பல குடும்பங்கள்  உறவினர்கள் வீடுகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக   அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்தார்.

மேலும்  கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 

அவர்களது நிலையறிந்து தனவந்தர்களும் அரசியல் பிரமுகர்களும் நிருவாக உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.No comments: