பாராளுமன்ற அமர்வுகளில், செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி


அடுத்த மாதம் முதல் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்ற அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டின் ஜனவரி 5ம் திகதி முதல் ஊடகங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்களில் ஒருவர் மட்டுமே செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததையடுத்து பாராளுமன்ற அமர்வுகளில் செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: