மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் - இறுதி தீர்மானம் நாளை


மேல் மாகாண பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்தல் குறித்த இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.இது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பார் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று ஒழிப்புடன் மேல் மாகாணதத்திலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.

வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்களுடன் அவர்களின் பகுதிகளில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.

இதற்கமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: