லிந்துலை விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் மஹிந்தானந்த

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


லிந்துலை பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறியும் கூட்டம் இன்று (28/12/2020) தலவாக்கலை லிந்துலை விவசாய மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் லிந்துலை பிரதேசத்தில் மரக்கறி விவசாயம் செய்வோர் கலந்து கொண்டனர்.

இதன் போது லிந்துலை பிரதேசத்தில் மரக்கறி உற்பத்தியாளர்களிடம் இடைத்தரகர்கள் குறைந்த விலையில் தம்மிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதால் தாம் முதலீட்டையே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளாதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும்,உரிய விலைக்கு மரக்கறிகளை நேரடியாக கொழும்பு மத்திய நிலையத்திற்கு    ஏற்றுமதி செய்வது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்,லிந்துலையில் மரக்கறி கொள்வனவு மத்திய நிலையமொன்றை  அமைத்தல்,விவசாயம் செய்ய காணி , மானிய விலையில் பசளை ,விவசாய இயந்திரங்கள் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.No comments: