ஆரம்ப பிரிவு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்


மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள ஆரம்பபிரிவு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கல்வி அமைச்சர் ஜ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தரம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான பாடசாலைகள்  எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: